ஆரோக்கியமாக வாழ்தல்

கீழ்க்காணும் அறிவுரைகளை கடைப்பிடித்தால், நீங்கள்  சில தொற்று நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கலாம்.

4A Haende Waschen

உங்கள் கைகளை அடிக்கடி சவர்க்காரம் பாவித்து கழுவுதல் என்பது இலகுவானதும் மிக பயனுள்ளதுமான செயற்பாடுமாகும். ஆகக் குறைந்த பட்சம் மலசல கூடத்துக்கு சென்று வரும் போதும், உணவுகள் உட் கொள்ளும் முன்பும் கைகளைக் கழுவுங்கள்.

1D Haende

தினந்தோறும் குளியுங்கள் அத்துடன் நாளுக்கு மூன்று தடவை பல் துலக்குங்கள்.

ஒழுங்கான உடற்பராமரிப்பு உங்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும். உங்களுக்கு பல்வலி ஏற்பட்டால் மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

4D Impfung

தடுப்பூசிகள் போடுவதால் பல வித நோய்கள் வராமல் தடுக்கலாம். தடுப்பூசிகள் பல்வேறு தொற்று  நோய்களின் தாக்கத்தை குறைக்கின்றன.

சுவிஸ் சுகாதார திணைக்களம் கீழ்க்காணும் நோய்களுக்கெதிரான தடுப்பூசிகளை போடுமாறு பரிந்துரை செய்கிறது.

  • அம்மை நோய்
  • சின்னம்மை/கூவைக்கட்டு/ருபெல்லா
  • அழற்சி/ஏர்ப்பு/குக்கல்
  • போலியோ
Icon_Medic_Help.png

மருத்துவ உதவியை நாடி (Medic-Help) உகந்த ஆலோசனைகளை பெற்றிடுங்கள்.

4E Geschlechtsverkehr

உடலுறவின் போது எயிட்ஸ் மட்டுமல்லாது பல வித பாலியல் நோய்களும் தொற்றுகின்றன. உடலுறவின் போது ஆணுறைகளை பயன்படுத்துவது மிகச் சிறந்த பாதுகாப்பாகும். அத்துடன் பெண்களுக்கான பெண் உறைகளும் உள்ளன.

இவ் உறைகளை நீங்கள் வசிக்கும் மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் அல்லது மருந்தகம் (Apotheken), மருந்துக்கடை(Drogerien) பலசரக்கு கடைகளிலும் வாங்கலாம் .

4F Drogenkonsum

நீங்கள் போதைமருந்தை, பாவித்த ஊசியினூடாக உட் செலுத்தும் போது, இரத்தத்தினூடாக தொற்றுக்கள் ஏற்படும். எப்போதும் துப்பரவான, பிற நபர் பயன்படுத்தாத ஊசிகளை பயன்படுத்துங்கள்.

2C Schwangerschaft

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் மருத்துவ உதவிக்கு (Medic-Help) அறிவியுங்கள். அவர்கள் உங்களுக்கு என்ன தேவையெனவும், முறையே நீங்களும்  சிசுவும் ஆரோக்கியமாக வாழ்தல் பற்றியும் விளக்குவார்கள், அத்துடன் விசேட மருத்துவருடான சந்திப்புக்கும் ஒழுங்கு செய்து தருவார்கள்.

1B Wo Medizinische Hilfe

உங்கள் பிள்ளைகளை தவறாது மருத்துவ உதவியிடம் (Medic-Help) பரிசோதியுங்கள். மருத்துவ உதவி (Medic-Help) உங்கள் குழந்தைக்கான சத்துணவு மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை  வழங்குவர். உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதுடன் தகுந்த வளர்ச்சியடைவார்கள்.