சுவிஸ் மருத்துவ சேவை

சுவிஸில் வாழும் சகல மனிதர்களுக்கும் மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ள உரிமயுண்டு. புகலிட மையத்தில் வசிப்பவர்கள் முதலில் மருத்துவ உதவியை (Medic-Help)  நாட வேண்டும்.

முதலில் குடும்பவைத்தியர்

சுவிஸில் நோய்கள் அல்லது விபத்துக்கள் ஏற்படும் போது முதலில் குடும்பவைத்தியரிடம் செல்வது தான் வழக்கத்திலுள்ளது. அவர்கள் உங்களுக்கான சிகிச்சையை வழங்குவார், தேவை ஏற்படின் மருத்துவமனைக்கோ அல்லது பிரத்தியேக வைத்தியரிடமோ அனுப்புவார்.

குடும்பவைத்தியர், தனது நோயாளியின் நோய்கள் பற்றிய விபரங்களை அறிந்திருப்பதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க, இலகுவாக இருக்கும். ஆகையால் ஒரே குடும்ப வைத்தியரையே நாடுங்கள்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு உடல் சுகவீனமுற்றிருப்பின் நேரடியாக மருத்துவ மனைக்கு செல்லாமல் முதலில் குடும்பவைத்தியரிடம் செல்லுங்கள்.

Icon_Medic_Help.png

மிக அவசரம் ஏற்படும் போதும் அல்லது மகப்பேற்றுக்கும் நேரடியாக மருத்துவ மனைக்குச் செல்லுங்கள்.

புகலிட மையத்தில் வசிப்பவர்களுக்கான மருத்துவ பராமரிப்பு

நீங்கள் புகலிடம் கோரியிருந்தால் (அனுமதிப்பத்திரம் N),பாதுகாப்புத்தேவையுள்ளவர்கள் (S) அல்லது தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் (F) ஆயின்,உங்களுக்கு பொறுப்பான மாநில காரியாலயங்களே மருத்துவக் காப்புறுதியை செய்திருப்பார்கள்.  வதிவிட அனுமதி பெற்றவர்கள் (B- அல்லது C- அனுமதிப்பத்திரம்) தாங்களாகவே காப்புறுதி செய்ய வேண்டும். மருத்துவக் காப்புறுதி வைத்திருப்பது கட்டாயம்.

மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் இரகசியம் பேண கடமைப்பட்டவர்கள்: அதாவது நோயாளியான உங்கள் தகவல்களை பிறருக்கு வழங்கக்கூடாது. தகவல் வழங்கல் உங்கள் சம்மதத்துடன் மட்டுமே நடைபெறும்.