நோய்கள்

நீண்ட காலங்களாக நோயால் அவதியுறுகிறீர்களா?  தினந்தோறும் மருந்துகள் உட்கொள்ளுகிறீர்களா?  உங்கள் தாய்நாட்டில் அல்லது இடப்பெயர்வின் போது சிகிச்சை மேற்கொண்டீர்களா?

Icon_Medic_Help.png

மருத்துவ உதவிக்கு சென்று உங்கள் பிரச்சனைகளை விளங்கக் கூறுங்கள்.

சில நோய்கள் தொற்றும் தன்மைகள் கொண்டவை. அதாவது, ஒரு நபரிடமிருந்து ஏனையவர்களுக்கும் தொற்றும். அது காற்றினூடாக, அழுக்கு படிந்த கைகளினூடாக, இரத்தத்தினூடாக அல்லது உடலுறவினூடாக நடைபெறும், அத்துடன் வாந்தியினூடாகவும், உடற் கழிவினூடாகவும் அல்லது நேரடித் தொடர்பு மூலமும் தொற்றும்.

Icon_Medic_Help.png

இப்படியான உபாதைகள் இருக்கும் பட்சத்தில், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள். இதனால் உங்களையும், உங்களைச் சார்ந்த சக மனிதர்களையும், பாதுகாத்துக் கொள்ளலாம்.

உடலுறவின் போது, திறிப்பர் (Tripper), ஹேர்பஸ்( Herpes),  ஸிபிலிஸ்(Syphilis) அல்லது கிளாமிடியன்(Chlamydien) தொற்றலாம். அதன் விளைவாக பிறப்பு உறுப்புகளில் திரவம் வடிதல், சொறிதல், வீக்கம், புண் அல்லது வலிகள் வரலாம். ஒரு உபாதைகளையும் உணராமலே கிருமித் தொற்று ஏற்படலாம்.

Icon_Kondome.png

உடலுறவினூடாக தொற்றும் நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்: எப்போதும் உடலுறவின் போது ஆணுறைகளை பயன்படுத்துங்கள்.  இவற்றை நீங்கள் இந்த மையத்தில் அல்லது மருந்தகம் (Apotheken), மருந்துக்கடை(Drogerien), பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் வாங்கலாம்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு பாலியல் தொற்று நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Icon_Medic_Help.png

நீங்கள் ஆணுறை அணியாமல் உடலுறவு கொண்டிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஏதேனும் பாலியல் தொற்று நோய் தொற்றியிருக்குமா என ஐயப்பாடு இருந்தால் மருத்துவ உதவியிடம் Medic-Help ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். பாரிய தாக்கங்கள் ஏற்படும் வரை காத்திருக்காதீர்கள்.

எச்ஐவி என்பது ஒரு வைரஸ், அது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இந்த வைரஸை உங்கள் உடம்பு காவித்திரியும், ஆனாலும் எந்தவித உபாதைகளும் இருக்காது. நீங்கள் மருந்துகள் உட்கொள்ளாவிடின், உங்கள் உடல் மிக பலவீனம் அடைந்து, நோய் முற்றி விடும். இதனை எயிட்ஸ் நோய் என்பார்கள்.

இந்த நோயானது இரத்தத்தின் மூலம், ஆணுறை அணியாமல் உடலுறவு கொள்ளும் போதும், பாவித்த மற்றும் அழுக்கான ஊசிகள் மூலமும் அல்லது நேரடியாக தாயிடமிருந்து வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் தொற்றிக்கொள்ளும். நீங்கள் இந்த வைரஸை காவும் பட்சத்தில், அதன் தாக்கங்கள் இல்லாத போதும், மற்றைய நபர்களுக்கு அதனை தொற்ற வைக்க முடியும்.

எச்ஐவி/எயிட்ஸை குணப்படுத்த முடியாது. மருந்துகள் இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும், அத்துடன் அதன் தாக்கத்தைக் குறைக்கும்.

Icon_Kondome.png

உங்களை எச்ஐவி/எயிட்ஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்: எப்போதும் உடலுறவின் போது ஆணுறை அணியுங்கள். இவற்றை நீங்கள் இந்த மையத்தில் அல்லது மருந்தகம் (Apotheken), மருந்துக்கடை(Drogerien), பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் வாங்கலாம்.

Icon_Spritze.png

நரம்பு வழியாக போதை மருந்து உள் எடுக்கும் போது, எப்போதும் துப்பரவான, பாவிக்காத புதிய ஊசிகளை பயன்படுத்துங்கள், அதனால் தொற்றுக்கள் ஏற்படாதிருக்கும்.

Icon_Medic_Help.png

நீங்கள் ஆணுறை அணியாமல் உடலுறவு கொண்டிருக்கும் பட்சத்தில்,உங்களுக்கு எச்ஐவி/எயிட்ஸ் அல்லது ஏதேனும் பாலியல் தொற்றுநோய் தொற்றியிருக்குமா என ஐயப்பாடு இருந்தால் மருத்துவ உதவியிடம் (Medic-Help) ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். பாரிய தாக்கங்கள் ஏற்படும் வரை காத்திருக்காதீர்கள்.

காச நோய் உள்ள நபர்கள் ஆகக் குறைந்தது மூன்று கிழமைகளுக்கு மேல் இருமுவார்கள், காய்ச்சல், இரவில் வியர்க்கும் அத்துடன் எடையும் குறைவார்கள். ஆரோக்கியமான நபர், காச நோயுள்ளவர் இருமும் இடத்தில் இருக்கும் காற்றை சுவாசித்தால் அந்நோய் மற்றவருக்கும் தொற்றும்.

காச நோய் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனினும் நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால், குணப்படுத்தலாம். இதற்கான சிகிச்சை குறைந்தது 6 மாதங்களாகும்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு காசநோய் அறிகுறி இருந்தால், ஏற்கனவே காசநோய்க்கான சிகிச்சை பெற்றிருந்தால்,அல்லது காசநோயால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு இருந்தால் மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

மது, போதைவஸ்து, அல்லது வேறு பொருட்கள் அடிமையாக ஆக்குவதுடன் உடல் நலத்திற்கும் கேடு விளைவிற்கின்றது. போதைவஸ்து பாவிப்பதை தவிருங்கள்.

நரம்பின் ஊடாக போதைமருந்தை உட் செலுத்தும் போது இரத்தத்தில் நோய்கள் கடத்தப்படும். உதாரணமாக நீங்கள்  பாவித்த ஊசியை பயன்படுத்தும் போது இது நடைபெறும்.

Icon_Spritze.png

உங்களால் போதைவஸ்து பாவனையை தவிர்க்க முடியாவிடின், தொற்றுக்கள் ஏற்படாமலிருக்க, எப்போதும் துப்பரவான பாவிக்காத ஊசிகளை, பயன்படுத்துங்கள்.

Icon_Medic_Help.png

அடிமையாதல் நோயை சிகிச்சை மூலம் குறைத்துக்கொள்ளலாம். மருத்துவ உதவியை  (Medic-Help) நாடுங்கள்.

கசப்பான அனுபவம் அல்லது வன்முறை –  உதாரணமாக போர், இடப்பெயர்வு, சித்திரவதை அல்லது பாலியல் வன்முறை – போன்றவை உடல் அல்லது உளப் பாதிப்புக்களை ஏற்படுத்தும். அத்துடன் அதிக மது அருந்துதல் அல்லது அடிமை நோய் ஆகியவை இணைந்து கொண்டு  பாதிப்புக்களை இன்னும் அதிகரிக்கும்.

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அந் நோயைப் பற்றி உரையாடுவது மிகக் கடினமாக இருக்கும். எனினும் அந்த நோயையும் ஏனைய நோய்கள் போன்று தீவிரமாக எடுத்துக்கொண்டு சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.

உளவியல் பாதிப்புக்களின் அறிகுறிகள், நீண்ட காலமாக ஒழுங்கான நித்திரையின்மை, பயங்கரக் கனவுகள், காரணமில்லாத வலிகள் அல்லது வேறு உபாதைகள் ஆகும்.

Icon_Medic_Help.png

உளவியல் பாதிப்பை குணப்படுத்தலாம். மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

அம்மை நோய் மிக துரிதமாக தொற்றக்கூடிய நோய். காய்ச்சல், தோலில் அரிப்பு,  தொடக்கத்தில் நீர்க் கொப்பளங்களும்  ஏற்படும். அம்மை நோய்க்கு முற்கூட்டியே தடுப்பு ஊசி போடலாம்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு அம்மை நோய்க்கான அறிகுறி தென்பட்டால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு இன்னமும் அம்மை நோய் வரவில்லையாயின் அதற்கான தடுப்பூசியை மருத்துவ உதவியிடம் (Medic-Help) சென்று போட்டுக் கொள்ளுங்கள்.

சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சிவந்த கண்கள், இருமல் அத்துடன் தோல் அரிப்பு, தோல் சிவந்திருத்தல் ஆகியவை இருக்கும். சின்னம்மை நோய்க்கு முற்கூட்டியே தடுப்பூசி  போடலாம்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு சின்னம்மை நோய்க்கான அறிகுறி தென்பட்டால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு இன்னமும் சின்னம்மை நோய் வரவில்லையாயின் அதற்கான தடுப்பூசியை மருத்துவ உதவியிடம் (Medic-Help) சென்று போட்டுக் கொள்ளுங்கள்.

அழற்சி நோயானது மேற்பக்க சுவாசத் தொகுதியில் அல்லது தோலில் வரும். இது இரண்டு வகையாக உள்ளது : தொண்டை அழற்சி, தோல் அழற்சி.

தொண்டை அழற்சி நோயுள்ளவர்களுக்கு தொண்டையில் வலி, காய்ச்சல் ,விழுங்கும் போது வலி என்பன இருக்கும். தோல் அழற்சி உள்ளவர்களுக்கு விரைவில் குணமடையாத புண்கள் முக்கிய அறிகுறியாகும்.

அழற்சிகளுக்கு எதிராக தடுப்பூசி போட்டு முற் பாதுகாப்பு செய்யலாம்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு தொண்டை அழற்சி நோய்க்கான அறிகுறி தென்பட்டால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு இன்னமும்  தொண்டை அழற்சி நோய் வரவில்லையாயின் அதற்கான தடுப்பூசியை மருத்துவ உதவியிடம் (Medic-Help) சென்று போட்டுக் கொள்ளுங்கள்.

சிரங்கு என்பது பொதுவான ஒரு தோல் நோயாகும். நுண்ணுயிர்கள் தோலைத்தோண்டி முட்டையிடும்.

இது கடுமையான அரிப்பு, கொப்பளங்கள் தோல் பொருக்குகள் என்பவற்றை ஏற்படுத்தும், இதை பிறப்புறுப்பு, விரல்களுக்கிடையில், கை மற்றும் மற்றைய மூட்டுக்கள், அக்குள்கள்,  முலைக்காம்பு ஆகிய உறுப்புக்களில் உணரலாம்.

இந் நோயானது நேரடியான தோலுடன் தோல் தொடர்பின் மூலமாக இருவருக்கிடையில் பரவுகிறது.

Icon_Medic_Help.png

உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு சிரங்கு நோய்க்கான அறிகுறி தென்பட்டால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

இரைப்பை குடல் வீக்கம் இருக்கும் போது அதிகமாக குமட்டல்,வாந்தி வயிற்றோட்டம் என்பன வயிற்று வலியுடனும் காய்ச்சலுடனும் இணைந்து வரும். இந்நோயாளி குறுகிய நேரத்தில் உடலில் இருக்கும் நீர்த் தன்மையை இழந்து விடுவார்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு  இரைப்பை குடல் வீக்கம் நோய்க்கான அறிகுறி தென்பட்டால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Icon_Trinken.png

அடிக்கடி  போதுமான அளவு நீர் அல்லது தேநீரை அருந்துங்கள்.

Icon_Haende_waschen.png

மற்றவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க உங்கள் கைகளை அடிக்கடி சவர்க்காரம் பாவித்து கழுவுங்கள்.

ஏராளமான நோய்கள் உள்ளன. இங்கு விசேடமாக தொற்றுநோய் பற்றிய தகவல்களை காண்கிறீர்கள்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு இருக்கும் அறிகுறிகள், இங்கு குறிப்பிட்ட நோய்களோடு ஒத்து வராவிட்டாலும்,  மருத்துவ சேவையை (Medic-Help) நாடுங்கள்.