சுகவீனம் ஏற்பட்டால் என்ன செய்வது?

ஒவ்வொரு புகலிடக்கோரிக்கை மையங்களிலும் மற்றும் புகலிடக்கோரிக்கை ஆராயும் மையங்களிலும் மருத்துவ உதவி (Medic-Help) மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். நீங்கள் தினந்தோறும் மருந்துகள் உட்கொண்டால், கர்ப்பமாக இருந்தால்,நோய்வாய்ப்பட்டால் அல்லது ஆரோக்கியம் பற்றிய கேள்விகள் ஏற்படின் மருத்துவ நிபுணர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள். இந்த மருத்துவ நிபுணர்கள் தாங்களே சிகிச்சை அளிப்பார்கள் அல்லது அவசியம் ஏற்படின் வைத்தியரிடமோ வைத்தியசாலைக்கோ அனுப்பி வைப்பார்கள்.

மருத்துவ உதவி (Medic-Help) மூடப்பட்டிருந்தால், அங்கிருக்கும் பராமரிப்பு அல்லது பாதுகாப்பு ஊழியரிடம் உதவியை நாடுங்கள்.

உங்கள் ஆரோக்கியம் பற்றிய கேள்விகள் மற்றும் உங்கள் நோய்கள் பற்றிய தகவல்கள் இரகசியமாக பேணப்படும்.

உங்களுக்கு விபத்துக்கள் ஏற்படின் முதலில் மருத்துவ உதவியை ( Medic-Help) நாடுங்கள். அவசரமெனும் பட்சத்தில் மட்டுமே நேரடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள்.

Icon_Medic_Help.png

நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள் நோய் வாய்ப் படும் பட்சத்தில், அல்லது ஆரோக்கியம் பற்றிய கேள்விகள் ஏற்படும் வேளை மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

 

புகலிட கோரிக்கையாளர்கள் தங்கும் பிற மையங்களிலும் மருத்துவ பராமரிப்பு

புகலிட கோரிக்கையாளர்கள் தங்கும் பிற மையங்களிலும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விடயங்களை கேட்டறிந்து கொள்ள மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். சரியான தகவல்களை அவ்விடத்திலே பெற்றுக் கொள்வீர்கள்.