Medic-Help Asyl
  • சுகவீனம் ஏற்பட்டால் என்ன செய்வது?
    உடல் உபாதைகள்
    நோய்கள்
    ஆரோக்கியமாக வாழ்தல்
    சுவிஸ் மருத்துவ சேவை
    நுளைவுத்தகவல்
    icon-sprache.png
    • English
    • Deutsch
    • Français
    • Italiano
    • Shqip (Albanisch)
    • Bamanakan (Bambara)
    • Fulani
    • Igbo
    • Hrvatski (Kroatisch)
    • Kurmancî
    • Lingala
    • Mandinŋo (Mandinka)
    • Português (Portugiesisch)
    • Română (Rumänisch)
    • Soomaali
    • Español
    • Kiswahili
    • Türkçe (Türkisch)
    • Twi
    • Wolof
    • العربية (al-Arabiya)
    • کوردی (Badini)
    • درى (Dari)
    • فارسى (Farsi)
    • پشتو (Paschtun)
    • پنجابی (Punjabi)
    • کوردیی ناوەڕاست (Sorani)
    • اردو (Urdu)
    • български (Bulgarisch)
    • Монгол (Mongolisch)
    • Українська (Ukrainisch)
    • русский (Russisch)
    • Հայերեն (Armenisch)
    • አማርኛ (Amharisch)
    • ትግርኛ (Tigrinnya)
    • ქართული (Georgian)
    • தமிழ் (Tamil)
    • བོད་སྐད (Tibetisch)
  • Für Betreuende:

  • பதிப்பு மற்றும் தொடர்பு

    Stand: தை 2018

  • உடல் உபாதைகள்
  • இருமல்
  • காய்ச்சல்
  • இரவில் வியர்த்தல்
  • தோலில் மாற்றங்கள் தோல் அரிப்பு
  • திறந்த தோல் புண்கள்
  • வயிற்றோட்டம்
  • வாந்தி
  • நித்திரையின்மை, பயங்கள் மற்றும் வலிகள்
  • வேறு உபாதைகள்
Beschwerden.png

இங்கு நாம் மிக முக்கியமான தொற்று நோய்களின் அறிகுறிகளைப் பற்றிய விடயங்களை உங்களுக்கு அறியத்தருகின்றோம். நீங்கள் இவற்றிற்கான சிகிச்சையை விரைவாக பெற்றுக் கொள்ளுதல் அவசியம்.  இதனூடாக, உங்கள் உடல் நலத்தை பாதுகாப்பதோடு, மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதையும் தடுக்கக் கூடியதாக இருக்கும்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டால் அல்லது சுகவீனமுற்று இருப்பதாக உணர்ந்தால் மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Husten.png

இருமல் பல்வேறுபட்ட நோய்களின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குளிர் காய்ச்சலாக இருக்கும். சிலவேளைகளில் இது ஒரு தொற்று நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு அடிக்கடி, கடுமையான, அல்லது நீண்ட காலமான இருமல், அல்லது சளியுடன் கூடிய இருமல் இருப்பின் மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

இருமல் பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். அத்துடன் சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கும்:

காசநோய்

சின்னமுத்து

Fieber.png

உடலின் வெப்பநிலை, சாதாரண வெப்பநிலையை விட அதிகரித்தால் காய்ச்சல் எனப்படும். அது ஒரு தொற்றுநோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு காய்ச்சல் வந்தால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Icon_Medic_Help.png

உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Icon_Trinken.png

சிறு அளவுகளில் தண்ணீர் அல்லது தேநீரை அடிக்கடி அருந்துங்கள், அத்துடன் உடல் உழைப்பை தவிருங்கள்.

காய்ச்சல் பல்வேறு நோய்களின் முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம். அத்துடன் சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கும்:

காசநோய்

அம்மை நோய்

சின்னம்மை

Nachtschweiss.png

வெப்பகால இரவுகளில் கடுமையாக வியர்ப்பது சாதாரணம். அதேபோல் படுக்கையறையில் வெப்பமூட்டி கூடுதலாக செயற்படும் போதும் அதிகம் வியர்க்கும். ஆனாலும்  படுக்கையறை சாதாரண வெப்ப நிலையில் இருக்கும் போதும் கடுமையாக வியர்த்தால் அது ஒரு தொற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு இரவில் வியர்த்தலுடன் கூடிய காய்ச்சல், அத்துடன் எடைக் குறைவு, என்பவை ஏற்பட்டால் மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

இரவில் வியர்த்தல் என்பது பல் வேறு நோய்களின் முற்கூட்டிய அறிகுறியாகும். அத்துடன் சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கும்:

காசநோய்

Hautauschlag.png

தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பாக தடித்திருத்தல் அல்லது தோலில் பருக்கள் அல்லது தோல் மிகவும் காய்ந்திருத்தல் செதிலாக உரிதல் அல்லது கடுமையாக கடித்தல். இவை தொற்று நோய்க்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

Icon_Medic_Help.png

தோலில் மாற்றங்கள் அல்லது அரிப்பு ஏற்பட்டால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

தோலில் மாற்றங்களும் தோல் அரிப்பும் பல்வேறு நோய்களுக்கான அறிகுறிகளாகும். அத்துடன் சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கும்:

சிரங்கு

அம்மை நோய்

சின்னம்மை

Offene_Hautwunden.png

வெட்டுப்படுதல், சிராய்ப்புகள் அல்லது முள் தைப்பது போன்றவை தோலில் காயங்கள் ஏற்படுத்துவதுடன் திறந்த தோல் புண்ணை உருவாக்கும். இலகுவில் குணமடைய முடியாத புண்களுக்கு சிறப்பு கவனம் தேவை.

Icon_Medic_Help.png

உங்களுக்கு திறந்த புண்கள் இருந்தால் மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

திறந்த தோல் புண்கள் பெரும்பாலும் காயங்களினால் ஏற்படுபவையாகும். அவை இலகுவில் குணமடையாவிட்டால்,  பின்வரும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்:

தோல் அழற்சி நோய்

Durchfall.png

நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று தடவைக்கு மேல் மலம் கழிக்க வேண்டி இருப்பின், அல்லது உங்கள் மலம் திரவத்தன்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை வயிற்றோட்டம் என கூறுவர். இந்த அறிகுறி ஒரு தொற்று நோய் தொற்றியிருப்பதன் அடையாளமாகும்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு வயிற்றோட்டமாக இருந்தால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Icon_Trinken.png

போதுமான அளவு தண்ணீர் அல்லது தேநீர் குறைந்த அளவில் அடிக்கடி அருந்துங்கள்.

Icon_Haende_waschen.png

மற்றவர்களுக்கு தொற்றாதிருக்க, அடிக்கடி உங்கள் கைகளை சவர்க்காரம் பாவித்து கழுவுங்கள்.

வயிற்றோட்டமானது பலவேறு நோய்களின் அறிகுறியாகும். அத்துடன் சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கும்:

இரைப்பை-குடல்-வீக்கம்

Erbrechen.png

வாந்தியெடுத்தல் பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். வாந்தியெடுத்தல் தொற்று நோய்க்குரிய அறிகுறியாகவும் இருக்கலாம்.

Icon_Medic_Help.png

உங்களுக்கு வாந்தி இருந்தால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

Icon_Trinken.png

அடிக்கடி சிறு அளவில் போதுமான அளவு தண்ணீர் அல்லது தேநீர் குடிக்கவும்.

Icon_Haende_waschen.png

மற்றவர்களுக்கு தொற்றாதிருக்க, அடிக்கடி உங்கள் கைகளை சவர்க்காரம் பாவித்து கழுவுங்கள்.

வாந்தியெடுத்தல் பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். அத்துடன் சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கும்:

இரைப்பை-குடல்-வீக்கம்

Schlechter_Schlaf.png

உங்களால் பல இரவுகள் ஒழுங்காக உறங்கமுடியாமல் இருந்தால் அல்லது காரணமில்லாது பயங்கள் இருந்தால், மனச் சோர்வின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதே போல் கண்டறியமுடியாத காரணங்களினால் வரும் வலிகளும் அடங்கும்.

Icon_Medic_Help.png

உங்களால் ஒழுங்காக உறங்கமுடியாமல் இருந்தால் அல்லது காரணமில்லாது உடலில் வலிகள் ஏற்பட்டால், மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

நித்திரையின்மை, காரணமில்லாத பயங்கள் மற்றும் காரணமில்லாத வலிகள் என்பவை பல்வேறு நோய்களின் அறிகுறிகளாகும். அத்துடன் சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கும்:

உளவியல் ரீதியான பாதிப்பு

Weitere_Beschwerden_w.png

இந்தப் பக்கத்தில் முக்கியமான தொற்றுநோய்கள் பற்றிய தகவல்களை காணலாம்.

நிச்சயம் மேலும் பல உபாதைகள் உள்ளன. நீங்கள் சுகவீனமுற்று இருப்பதாக உணர்ந்தால் அல்லது ஆரோக்கியம் பற்றிய கேள்வியெளின் மருத்துவ உதவியை (Medic-Help) நாடுங்கள்.

BAG-Logo-de EDI_BAG_e_RGB_pos_hoch.png
Datenschutzerklärung